விவாகரத்து கேஸ் ஓடுது.. அதுக்குள்ள ரெண்டாவது கல்யாணமா..? கட்டிலுக்கு அடியில் ஒளிந்திருந்த புதுப்பெண்ணை தூக்கிய முதல் மனைவி..! வீடியோ வைரல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விவாகரத்து கேஸ் ஓடுது.. அதுக்குள்ள ரெண்டாவது கல்யாணமா..? கட்டிலுக்கு அடியில் ஒளிந்திருந்த புதுப்பெண்ணை தூக்கிய முதல் மனைவி..! வீடியோ வைரல்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில், விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போதே, கணவர் ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக அவரது முதல் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். பிரசாந்த் சர்மா மற்றும் திஷா சர்மா ஆகிய இருவருக்கும் திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகும் நிலையில், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வரும் சூழலில், இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து கிடைக்காத நிலையில், தன் கணவர் வேறொரு பெண்ணை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக திஷா சர்மாவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர், தனது கணவரின் வீட்டிற்குச் சென்று விசாரித்துள்ளார். அங்கு அவருக்கு முறையான பதில்கள் கிடைக்காததால், அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது அவரது சந்தேகம் வலுவடைந்தது. இதையடுத்து, மறுநாள் மதியம் வீட்டின் மொட்டை மாடி வழியாக உள்ளே புகுந்து திஷா தேடியபோது, அங்குள்ள ஒரு அறையில் கட்டிலுக்கு அடியில் ஒரு பெண் மறைந்திருப்பதை கண்டுபிடித்தார்.

Advertisement

கட்டிலுக்கு அடியில் மறைந்திருந்த அந்தப் பெண்ணை திஷா வெளியே இழுத்து வந்து, அங்கிருந்த பொதுமக்கள் முன்னிலையில் உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கோட்வாலி நகர காவல்துறையினர், தம்பதியினரிடையே ஏற்கனவே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை உறுதிப்படுத்தி, இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in