LATEST NEWS
“லஞ்சம் கேட்டால் இந்த நம்பருக்கு போன் அடிங்க” அதிரடி வாட்ஸ்அப் எண்ணை வெளியிட்ட தமிழக அரசு.. அனைத்து அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்பு பலகை வைக்க கட்டாய உத்தரவு..!!
அரசு ஊழியர்கள் யாரேனும் லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் உடனடியாகப் புகார் அளிக்கலாம் எனத் தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, லஞ்சப் புகார்களைத் தெரிவிப்பதற்காக 9498180936 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை தொடர்பான அறிவிப்புப் பலகைகளைக் கட்டாயமாக வைக்க வேண்டும் என்று அந்தந்தத் துறைத் தலைவர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களின் புகார்களை வாட்ஸ்அப் மட்டுமின்றி, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 044-22321090, 22321085, 223210989 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டும் தங்களது லஞ்சப் புகார்களைப் பதிவு செய்யலாம் எனத் தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
