விஜய் உத்தரவை மீறி அரங்கேறும் லஞ்சக் கூத்து.. “ஒரு மூட்டைக்கு ரூ.60 கமிஷன்” கதறும் விவசாயிகள்… அதிர்ச்சியில் தமிழக அரசியல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய் உத்தரவை மீறி அரங்கேறும் லஞ்சக் கூத்து.. “ஒரு மூட்டைக்கு ரூ.60 கமிஷன்” கதறும் விவசாயிகள்… அதிர்ச்சியில் தமிழக அரசியல்..!!

Published

on

தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ஊழலை ஒழிப்பதில் முதலமைச்சர் விஜய் தீவிரம் காட்டி வந்தாலும், அவரது உத்தரவை மீறி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சப் புகார்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன திமுக கொண்டுவந்த திட்டங்களை விரிவாக்கம் செய்யும் விரிவாக்க அலுவலர்தான் முதல்வர் விஜய் – ஆ.ராசா விமர்சனம். தவெக அரசு அமைந்த பிறகும் அரசு கொள்முதல் நிலையங்களில் ஊழியர்கள் விவசாயிகளிடம் வெளிப்படையாக லஞ்சம் கேட்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழியர்கள் ஒரு நெல் மூட்டைக்கு ₹60 வரை லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் வேதனையுடன் குற்றம்சாட்டுகின்றனர். முன்னதாக, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஒரு மூட்டைக்கு ₹40 லஞ்சம் பெறப்படுவதாக முதலமைச்சர் விஜய் தனது திருவாரூர் தேர்தல் பிரசாரத்தின்போது சுட்டிக்காட்டியிருந்தார். தற்போது தவெக ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்ட நிலையிலும், இந்த முறைகேடு தொடர்வது விவசாயிகளிடையே பெரும் குமுறலை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in