LATEST NEWS
லஞ்ச வலையில் ஆன்மீக அதிகாரி… லட்சங்களை சுருட்டிய ஜோதிலட்சுமி கைது.. அடுத்தடுத்து அம்பலமாகும் பகீர் புகார்கள்..!!
கோவில் புதுப்பிப்பு பணிக்கான ஒப்பந்ததாரரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்மாபேட்டை தீபாம்பாள்புரம் வள்ளியம்மைநாதர் கோவில் பணிக்காக இந்த லஞ்சம் கைமாறியபோது அவர் பிடிபட்டார். 2011-ல் உதவி ஆணையராகப் பணியில் சேர்ந்த இவர், சென்னை பார்த்தசாரதிசுவாமி கோவில், திருவண்ணாமலை, தஞ்சாவூர் எனப் பல்வேறு முக்கிய ஆன்மீகத் தலங்களில் உயர் பதவிகளை வகித்தவர் ஆவார்.
இவருக்கு எதிராக ஏற்கனவே பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2016 பண மதிப்பிழப்பு காலத்தில் ரூ.10 லட்சம் கோவில் பணத்தை மாற்றாமல் வீணடித்தது, பக்தர் கொடுத்த நகையை அபகரித்தது மற்றும் சொர்க்கவாசல் திறப்பு டிக்கெட் கட்டணத்தில் ரூ.4 லட்சம் ஏமாற்றியது போன்ற புகார்கள் இவர் மீது இருந்தன. இவை தொடர்பாக துறை ரீதியான 17 பி பிரிவின் கீழ் நடவடிக்கைகள் பாய்ந்த போதிலும், இவருக்கு அடுத்தடுத்து பதவி உயர்வுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
