LATEST NEWS
“ஐயோ பாஸ் சிரிப்பு தான் வருது” காமெடி பண்ணாதீங்க… இரவோடு இரவா நீங்க பண்ணுன அந்த விஷயம்… EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட தவெக ஐடி விங்..!!!
சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக மற்றும் அதிமுக கூட்டுக்களவாணிகள் அல்ல என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். தேர்தலுக்கு முன்பும் பின்பும் முதலமைச்சர் விஜய் முரணாகப் பேசி வருவதாகக் குற்றம்சாட்டிய அவர், அதிமுகவில் வெற்றி பெற்றவர்களைக் குதிரை பேரம் நடத்தி, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வைத்துத் தனது கட்சியில் சேர்த்துக் கொண்ட விஜய்தான் உண்மையான களவாணி என்று மிகக் கடுமையாகச் சாடினார். மேலும், திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சியைக் பிடிக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் தகவல்கள் அனைத்தும் வெறும் கட்டுக்கதை என்றும் தவெக ஆட்சியையும் அதன் செயல்பாடுகளையும் அவர் விமர்சித்தார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தவெக ஐடி விங் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் காரசாரமானப் பதிவொன்றை வெளியிட்டுள்ளது. அதில், சொந்தக் கட்சி நடக்கிறதா அல்லது அதை நடத்துகிறோமா என்பதே தெரியாத ஒரு நபர், தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா என்று கேள்வி எழுப்புவது மிகவும் வேடிக்கையாக இருப்பதாகக் கிண்டலடித்துள்ளனர். மேலும், திமுகவுடன் சேர்ந்து கூட்டுக்களவாணி ஆட்சி அமைக்க இரவோடு இரவாகச் சந்தித்துத் திட்டம் தீட்டியவர்கள், தவெகவின் மனசாட்சியுள்ள மக்களாட்சியை ‘இரவல் ஆட்சி’ என்று விமர்சிப்பது அடக்க முடியாத சிரிப்பையே வரவழைப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவின் தற்போதைய உட்கட்சிப் பூசல்களைச் சுட்டிக்காட்டியுள்ள தவெக ஐடி விங், கொடநாடு கொலை வழக்குப் பற்றிப் பேசினாலே நடுங்குபவர்கள் எல்லாம் தவெக அரசு பற்றிக் குறைகூறுவது ‘குபீர் சிரிப்பு காமெடி’ என்று சாடியுள்ளது. சொந்தக் கட்சியே தற்போது பீஸ் பீஸாக உடைந்து வருவது கூடத் தெரியாமல், வெளியில் வந்து காமெடியாகப் பேட்டி கொடுப்பதை விடுத்து, முதலில் தனது கட்சியைப் போய்க் காப்பாற்றும் வேலையைப் பார்க்கட்டும் என்றும் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையான தொனியில் தவெக ஐடி விங் கிண்டல் செய்துள்ளது.
