LATEST NEWS
“என் மகன் பதவிக்கு வரமாட்டான்” என நாடகம் ஆடுகிறாரா இபிஎஸ்..? ஐடி விங் மூலம் மிதுனை களமிறக்க ரகசிய வியூகம்… இழுக்க கே.பி.முனுசாமி போட்ட பிளான்… ஏக கடுப்பில் வேலுமணி, சி.வி.சண்முகம்..!!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியில் பல்வேறு அமைப்பு ரீதியான மாற்றங்களை முன்னெடுக்கத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, கட்சியில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற போர்வையில், தனது மகன் மிதுனை அதிமுகவின் முக்கியப் பொறுப்புக்குக் கொண்டு வர அவர் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், மூத்த தலைவர் கே.பி. முனுசாமி திடீரென ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அவர் பேசுகையில், “புதிய தலைமுறையை முன்னிலைப்படுத்த வேண்டும், எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனும் கட்சியில் பொறுப்பு ஏற்க வேண்டும், அதற்கு யாரும் தடையாக இருக்கக் கூடாது” எனப் பேசி மற்ற தலைவர்களின் ரியாக்ஷனை அறிய ஆழம் பார்த்துள்ளார். வாரிசு அரசியலை எதிர்த்து உருவான இயக்கத்தில், இதுவரை எந்தவொரு அடிப்படை கட்சிப் பொறுப்பிலும் இல்லாத ஒருவரை திடீரென முன்னிலைப்படுத்துவது எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் போன்ற மூத்த தலைவர்களிடையே ஏக கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.
உட்கட்சிப் பூசல் வெடித்ததை அடுத்து, பொதுவெளியில் “எனது மகன் கட்சிப் பதவிக்கு வரமாட்டார்” என்று இபிஎஸ் முற்றுப்புள்ளி வைக்க முயன்றார். இருப்பினும், தேர்தல் காலத்தில் சரியாகச் செயல்படாத ஐடி விங் (IT Wing) பிரிவை மாற்றியமைத்து, அதன் மூலம் மிதுனை பின்வாசல் வழியாக உள்ளே கொண்டு வர இபிஎஸ் தொடர்ந்து காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. மிதுனின் இந்த மறைமுக அரசியல் என்ட்ரி, அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து வரும் அதிமுகவுக்குள் புதிய உள்கட்சிப் பூசலை உருவாக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
