LATEST NEWS
“விசாரணைக்கு வந்தால் வேறு வழக்குல தூக்கப் பாக்குறாங்க” போலீசுக்கு செந்தில் பாலாஜி எழுதிய அதிரடி கடிதம்.. “எங்களிடம் முன்ஜாமீன் இருக்கு… ஓடி ஒளியல” எனப் பரபரப்பு குற்றச்சாட்டு..!!
தவெக எம்.எல்.ஏ.-விடம் பேரம் பேசியதாகப் பதியப்பட்ட வழக்கில், சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையருக்கு முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தன்னிடம் நீதிமன்ற முன்ஜாமீன் உள்ளதாகவும், தானும் தனது தம்பியும் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் தனது பெயரோ அல்லது தனது தம்பியின் பெயரோ இல்லாத சூழலில், தங்களுக்கு எதற்காகச் சம்மன் அனுப்பப்பட்டது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விசாரணைக்கு நேரில் ஆஜராகாததற்கான காரணம் குறித்துக் குறிப்பிட்டுள்ள செந்தில் பாலாஜி, தாங்கள் விசாரணைக்கு ஆஜராகும் பட்சத்தில், காவல்துறை தங்களை வேறு ஒரு வழக்கில் திட்டமிட்டு கைது செய்ய வாய்ப்புள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். அதனால்தான் தங்களால் ஆஜராக முடியவில்லை என்று விளக்கியுள்ள அவர், இந்த சம்மன் விவகாரம் குறித்துக் காவல்துறையிடம் இருந்து முறையான விளக்கம் வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
