LATEST NEWS
கல்வி உலகிற்கு பேரிழப்பு..! பிரபல கல்வியாளர் டி.ஒய். பாட்டீல் மறைவு… சோகத்தில் இந்திய அரசியல் களம்..!!
நாடறிந்த கல்வியாளரும், பிஹார் மற்றும் திரிபுரா மாநிலங்களின் முன்னாள் ஆளுநருமான டி.ஒய். பாட்டீல் காலமானார். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இவர், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகளில் முக்கியப் பங்காற்றியவர். அரசியல் களத்தில் மட்டுமல்லாது, கல்வித் துறையிலும் இவர் ஆற்றிய சேவை அளப்பரியது. இவரது தலைமையில் செயல்படும் புகழ்பெற்ற ‘டி.ஒய். பாட்டீல் குழுமம்’ இந்தியா முழுவதும் சுமார் 182 கல்வி நிறுவனங்களை நிறுவி, லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளது.
அரசியல், சமூகம் மற்றும் கல்வி எனப் பல துறைகளில் முத்திரை பதித்த இவரது மறைவு செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், கல்வியாளர்களும், பொதுமக்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். கல்வித் துறைக்கு இவர் செய்த ஈடு இணையற்ற பங்களிப்புகள் என்றும் நினைவுகூரப்படும்.
