LATEST NEWS
BREAKING: பாலியல் புகாரில் கபடி பயிற்சியாளர் ராஜு போக்சோ சட்டத்தில் கைது..!!
சென்னையில் இளம் கபடி வீராங்கனை ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், கபடி பயிற்சியாளர் ராஜு என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட வீராங்கனை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
போலீசார் தன்னைத் தேடுவதை அறிந்த கபடி பயிற்சியாளர் ராஜு தலைமறைவாகியிருந்த நிலையில், அவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பதுங்கியிருப்பது தனிப்படை போலீசாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த சென்னை தனிப்படை போலீசார், தேடப்பட்டு வந்த அவரை கொடைக்கானலில் வைத்து மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
