தமிழகத்தில் வெடித்தது மோதல்…! திமுக, தவெகவினர் மாறி மாறி செருப்பை வீசி தாக்குதல்… பெரும் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழகத்தில் வெடித்தது மோதல்…! திமுக, தவெகவினர் மாறி மாறி செருப்பை வீசி தாக்குதல்… பெரும் பரபரப்பு..!!

Published

on

முதலமைச்சர் விஜய்யை ஆபாசமாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று தஞ்சை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் தஞ்சைக்கு அழைத்துச் சென்று கொண்டு இருக்கின்றனர். இந்த கைதைக் கண்டித்து, தஞ்சாவூரில் திமுகவினர் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில், முதலமைச்சரை அவதூறாகப் பேசிய உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழக (தவெக) தொண்டர்களும் அதே இடத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர். இரு கட்சியினரும் ஒரே பகுதியில் குவிந்ததால், அவர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு, பரஸ்பரம் செருப்புகளை வீசித் தாக்கிக் கொண்டனர். இந்த அடுத்தடுத்த அதிரடி சம்பவங்களால் தஞ்சை பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in