LATEST NEWS
“இரக்கமே இல்லையா உங்களுக்கு..?” 2 மணிநேரம் ஜன்னல் அருகே அலறிய குழந்தைகள்… தண்டனை என்ற பெயரில் பெற்ற்றோர்கள் செய்த கொடூரம்.. சோஷியல் மீடியாவில் கொதிக்கும் நெட்டிசன்கள்..!!
கொலம்பியா நாட்டின் ரிசரால்டா மாகாணத்தில் உள்ள சாண்டா ரோசா டி காபல் நகராட்சியின் லே ஹெர்மோசா – லா பிரதேரா 2 குடியிருப்புப் பகுதியில், குழந்தைகளுக்கு எதிராய் நடக்கும் கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கிருக்கும் வீட்டில், சிறு குழந்தைகளுக்குத் தண்டனை என்ற பெயரில், அவர்கள் அழுது ஓய்ந்து தூங்கும் வரை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகச் ஜன்னல் அருகில் நிற்க வைத்துச் சித்ரவதை செய்து வருகின்றனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்தப் பகுதியில் குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய கொடூரமான செயல்கள் தொடர்ந்து அடிக்கடி நடைபெற்று வருவதாக அக்கம் பக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, இந்த அநீதியைக் கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள், உடனடியாகத் தலையிட்டுச் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
