LATEST NEWS
6 ஆண்டுகளுக்கு பின் உடைந்த ரகசியம்…! கணவரிடம் 60 வயது முதியவர் பற்றி கூறிய மனைவி…. பெண்ணின் வாக்குமூலத்தால் அதிரடி ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்குக் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமண உறவுக்குப் பின், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு நேர்ந்த கொடூரமான பாலியல் அத்துமீறல் குறித்துத் தனது கணவரிடம் அந்தப் பெண் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டில் அவர் பத்தாம் வகுப்பு பயின்று கொண்டிருந்தபோது, அவரது அண்டை வீட்டில் வசித்து வந்த தர்ஷத் பட்டேல் (60) என்ற முதியவர், அந்தப் பெண்ணை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, தொடர்ச்சியாக அச்சுறுத்திப் பலமுறை பாலியல் தொல்லைகளும் கொடுத்து வந்துள்ளார். அச்சம் காரணமாக இந்த விபரங்களை யாவிடமும் கூறாமல் இத்தனை காலம் மறைத்து வைத்திருந்த அந்தப் பெண், தனது கணவரிடம் உண்மைகளைக் கூறியுள்ளார்.
தனது மனைவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எப்படியாவது சட்டப்படியான நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்று தீர்க்கமாக முடிவெடுத்த கணவர், இக்கொடூரம் குறித்துக் காவல் துறையிடம் உடனடியாகப் புகார் அளித்தார். இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், குற்றச்சாட்டுக்கு உள்ளான முதியவர் தர்ஷத் பட்டேல் மீது முறைப்படி வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அரங்கேறிய காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண் பதினெட்டு வயது நிரம்பாத மைனர் சிறுமியாக இருந்ததால், தற்போது அந்த முதியவர் மீது போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ள அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
