LATEST NEWS
செல்போனுடன் கழிவறைக்கு செல்பவரா நீங்கள்…? இரத்த ஓட்டத்தைத் தடுத்து உடலுக்குள் நடக்கும் சைலண்ட் விபரீதம்…. வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்…!!
இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன்களைப் பயன்படுத்திக்கொண்டே கழிவறையில் 10 முதல் 15 நிமிடங்களுக்கும் மேலாக நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் பழக்கம் பலரிடமும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு தேவையற்ற நேரத்தைச் செலவிடுவது மூல நோய் மற்றும் இடுப்புப் பகுதித் தசைகளில் பலவீனம் போன்ற தீவிரமான உடல்நலப் பாதிப்புகளைப் பரிசாக அளிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நாம் பயன்படுத்தும் முட்டை வடிவ கழிப்பறை இருக்கையானது உடலின் மலக்குடல் பகுதியைத் தாழ்வாக வைப்பதால், ஈர்ப்பு விசையின் காரணமாக இடுப்புப் பகுதியில் அழுத்தம் கணிசமாக அதிகரித்து இதயத்திற்கு இரத்தத்தை மீண்டும் கொண்டு செல்ல நம் உடல் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது.
இந்தத் தவறான பழக்கத்தால் மலக்குடல் பகுதியில் சீரான இரத்த ஓட்டம் தடைபட்டு, நரம்புகள் சுருண்டு வீங்கும் அபாயம் ஏற்படுவதுடன் மலம் கழிக்கும் போது அதிகப்படியாக முக்கிச் சிரமப்பட வேண்டிய நிலையும் உண்டாகிறது. இது நாள்பட்ட மலச்சிக்கல், செரிமானக் கோளாறுகள் மற்றும் மலக்குடலில் ஆபத்தான இரத்தப்போக்கு போன்ற பல்வேறு உபாதைகளுக்கு எளிதில் வழிவகுத்துவிடுகிறது.
எனவே, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கக் கழிவறைக்குள் செல்போன் பயன்படுத்துவதைத் தவிப்பதே நல்லது என்றும், மிகக் குறைந்த நேரத்திற்குள் பணிகளை முடித்து வெளியே வரவேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
