LATEST NEWS
ஜூலை 27 முதல் தலைகீழாக மாறப்போகும் சனியின் இயக்கம்… இந்த 3 ராசிகளுக்கு தான் உச்சக்கட்ட சோதனை….! இவங்க தான் ரொம்ப கவனமா இருக்கணும்…!!
வரும் ஜூலை 27 ஆம் தேதி முதல், நவக்கிரகங்களில் சக்திவாய்ந்த கிரகமான சனி பகவான் மீன ராசியில் தனது நேர் நடையை மாற்றி வக்ர கதியில் பின்னோக்கிய பாதையில் பயணிக்கத் தொடங்குகிறார். ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கவுள்ள சனியின் இந்த அதிரடி மாற்றத்தால், பன்னிரு ராசிகளுக்கும் பொருளாதார நிலை மற்றும் உடல்-மன ஆரோக்கியத்தில் பல்வேறு கலவையான பலன்கள் கிடைக்கப் போகின்றன.
குறிப்பாக, தற்போது ஏழரைச் சனியின் பிடியில் தவித்து வரும் கும்பம், மேஷம் மற்றும் மீனம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கும் இந்த காலகட்டம் மிகவும் சவாலானதாகவும், அடுக்கடுக்கான சிக்கல்களை எதிர்கொள்ளக் கூடியதாகவும் அமையப் போகிறது என்று ஜோதிட நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதில் கும்ப ராசியினருக்குப் பண நெருக்கடிகளுடன், தம்பதியருக்குள் சண்டைகளும், மேஷ ராசியினருக்குத் தொழிலில் நஷ்டமும் ஏற்பட வாய்ப்புள்ளதால் புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. ஆனால் மேஷ ராசிப் பெண்களுக்கு ஓரளவுக்கு நிம்மதி கிடைக்கும். அதேபோல் மீன ராசியினருக்குக் குடும்பப் பூசல்களும், கடுமையான உடல்நலக் குறைபாடுகளும் ஏற்படக் கூடும் என்பதால் விழிப்புணர்வு அவசியம்.
இந்த வக்ர பெயர்ச்சியால் உண்டாகும் எதிர்மறையான பாதிப்புகளில் இருந்து தப்பிக்க, சனிக்கிழமைகளில் அனுமன் சாலிசா மற்றும் சனி பகவானின் “ஓம் ஷம் சனைச்சராய நமஹ” என்ற மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரித்து வழிபட வேண்டும். மேலும், ஏழை எளிய மக்களுக்குத் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து தான தர்மங்களில் ஈடுபடுவதன் மூலம் சனியின் உக்கிரத்தைக் குறைத்து அவரது அருளைப் பெறலாம்.
