LATEST NEWS
“அறுவை சிகிச்சை பயம்.. கணவர் செய்த உதவி…” உயிரைப் பணயம் வைத்து யூடியூப் பார்த்து டெலிவரி… துடிதுடித்து இறந்த இளம்பெண்… பகீர் சம்பவம்…!!
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே யூடியூப் காணொளிகளின் துணைக் கொண்டு வீட்டிலேயே ஆபத்தான முறையில் பிரசவம் பார்க்க முயன்ற சசிகலா என்ற இளம்பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கோரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தளவாய்பாளையத்தைச் சேர்ந்த இவருக்கு முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்த நிலையில், இரண்டாவது குழந்தையை எப்படியாவது சுகப்பிரசவமாகப் பெற்றுவிட வேண்டும் என அவர் விரும்பியுள்ளார். இதற்காகத் தனது கணவர் மற்றும் மாமியாரின் உதவியுடன், மருத்துவமனைக்குச் செல்லாமல் இணையதள வீடியோக்களைப் பார்த்து வீட்டிலேயே குழந்தையைப் பெற்றுள்ளார்.
பிரசவம் முடிந்தபோதிலும், சசிகலாவின் உடலிலிருந்து நஞ்சுக்கொடி முழுமையாக வெளியேறாததால் அவருக்குக் கடுமையான அதீத இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நிலை குலைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு உடனடியாகக் கோவையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அந்தப் பெண் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். தற்போதைய நிலையில் பிறந்துள்ள பச்சிளம் குழந்தை அரசு மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் நல்வாய்ப்பாகப் பத்திரமாக உள்ள சூழலில், இந்தத் துயரச் சம்பவம் குறித்துப் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
