LATEST NEWS
காதலனை நம்பி வந்த காதலி…. “லாட்ஜ் அறையில் துடிதுடித்து…” ஊசி, மாத்திரை பார்த்து ஷாக்கான போலீஸ்… நடுங்க வைக்கும் பகீர் பின்னணி…!!
திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞரான சதாம் உசேன், அதே பகுதியைச் சேர்ந்த யாஸ்மின் என்ற இளம்பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். அண்மையில் வீட்டை விட்டு வெளியேறிய இந்த ஜோடி, திருச்சி ஜங்ஷன் ரவுண்டானா அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்களைக் கணவன்-மனைவி எனத் தவறாகக் கூறி அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஜூன் 8-ஆம் தேதி மாலை யாஸ்மினுக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே சதாம் உசேன் தனது நண்பரான ஷேக் அப்துல்லா (19) என்பவரின் உதவியுடன் யாஸ்மினை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்துக் கண்டோன்மெண்ட் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், யாஸ்மினுக்கு அவரது காதலன் சதாம் உசேனும், அவனது நண்பன் ஷேக் அப்துல்லாவும் இணைந்து ‘டெபன்டாடல்’ என்ற போதை மாத்திரையைக் கரைத்து ஊசி மூலம் செலுத்தியது அம்பலமாகியுள்ளது. அளவுக்கு அதிகமான போதை மருந்து உடலில் ஏறியதே இளம்பெண்ணின் மரணத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
அந்த விடுதி அறையிலிருந்து 7 போதை மாத்திரை அட்டைகள், ஊசிகள் மற்றும் சிகரெட் துண்டுகளைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது காதலன் மற்றும் அவரது நண்பரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதே வேளையில் யாஸ்மினின் தாய்க்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
