LATEST NEWS
“கல்யாணமான 4 நாளில் முடிந்த வாழ்க்கை…” புதுப்பெண் மரணத்தில் நீடிக்கும் மர்மம்… மகளை இழந்து பரிதவிக்கும் பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள முதல்சேரி கிராமத்தைச் சேர்ந்த, வெளிநாட்டில் பணிபுரியும் ஸ்டாலின் ஆரோக்கியபிரபாகர் என்பவருக்கும், அம்மாப்பேட்டையைச் சேர்ந்த ஜான்சி அஞ்சலி (26) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த ஜூன் 4-ஆம் தேதி விமரிசையாகத் திருமணம் நடைபெற்றுள்ளது. புதுமணத் தம்பதிகள் தங்களின் புதிய வாழ்க்கையைத் தொடங்கிய நிலையில், மர்மமான முறையில் திருமணமான நான்கே நாட்களில், அதாவது கடந்த 8-ஆம் தேதி இரவு, ஜான்சி அஞ்சலி தனது கணவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகப் பெண்ணின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களின் மகளின் இந்தத் திடீர் மரணத்தில் பெரும் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது தந்தை மூர்த்தி பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் பரபரப்புப் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர புலனாய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருமணம் முடிந்த மிகக் குறுகிய காலத்திலேயே இப்பெண் உயிரிழந்துள்ளதால், சட்ட விதிமுறைகளின்படி பட்டுக்கோட்டை உதவி ஆட்சியரும் (ஆர்டிஓ) இந்த மரணத்தின் பின்னணி குறித்துத் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்.
