“விவசாயிகளுக்கு ரூ.2 கோடி வரை நிதியுதவி…” 3% வட்டி மானியத்துடன் தமிழக அரசின் அதிரடித் திட்டம்…. முழு விவரம் இதோ…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“விவசாயிகளுக்கு ரூ.2 கோடி வரை நிதியுதவி…” 3% வட்டி மானியத்துடன் தமிழக அரசின் அதிரடித் திட்டம்…. முழு விவரம் இதோ…!!

Published

on

தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், நடப்பு 2026-27 நிதியாண்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ₹20 கோடி மதிப்பிலான கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு. ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள தனிநபர் அல்லது விவசாய அமைப்புகளுக்கு அதிகபட்சமாக ₹2 கோடி வரை நிதியுதவி வழங்கப்படும். இந்த முதலீட்டிற்கு 7 ஆண்டுகள் வரை 3 சதவீத வட்டி மானியத்துடன், அரசாங்கத்தின் கடன் உத்தரவாதமும் கிடைப்பதுடன், பயனாளிகள் தங்களின் பங்களிப்பாகத் திட்ட மதிப்பில் 10 சதவீதத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது.

Advertisement

இத்திட்டத்தின் கீழ் அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை, குளிர்பதனக் கிடங்குகள், நவீன சேமிப்புக் கூடங்கள், சிப்பம் கட்டும் மையங்கள், பண்ணைக்கழிவு மறுசுழற்சி மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்புகளை உருவாக்கப் பொருளாதார உதவி பெறலாம். இதற்குத் தனிப்பட்ட வேளாண் தொழில்முனைவோர், சுயஉதவிக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவை தகுதிபெற்ற அமைப்புகளாகும்.

விருப்பமுள்ளவர்கள் https://agriinfra.dac.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களின் விரிவான திட்ட அறிக்கையைச் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள வேளாண் வணிகத் துணை இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகலாம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in