CINEMA
மலையாள, தமிழ் போல கன்னட திரையுலகிலும் பாலியல் தொல்லை…. கமிட்டி உருவாக்க பரபரப்பு கோரிக்கை…!!

மலையாள திரை உலகில் பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நடிகைகள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மலையாள திரை உலகை அடுத்து தமிழ் திரை உலகில் பாலியல் தொந்தரவு உயர்ந்ததாக சில நடிகைகள் சமீபத்தில் பேட்டி அளித்தார்கள். தமிழ், மலையாளம் சினிமாவை அடுத்து தற்போது கன்னடத் திரையிலும் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நடிகைகள் சஞ்சனா, நீத்து ஆகியோர் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்கள்.
அதாவது, தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது இது குறித்து கர்நாடகா சினிமா வர்த்தக சபை கூட்டத்தில் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் தொல்லை பற்றி புகார் குறித்து பேசாமல் தடுத்து விட்டார்கள் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து கர்நாடகா முதல் மந்திரி சித்ராமையாவுக்கு கன்னட இயக்குனர் கவிதா லங்கேஷ் தலைமையில் குழுவினர் சினிமா உலகில் பாலியல் தொல்லை பற்றி விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளனர்.