“6 தொகுதிக்கும் தேர்தல் வருது…” களமிறங்கும் ஸ்டாலின், சீமான், அண்ணாமலை…? முதல்வர் விஜய்க்கு காத்திருக்கும் அக்னி பரீட்சை…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“6 தொகுதிக்கும் தேர்தல் வருது…” களமிறங்கும் ஸ்டாலின், சீமான், அண்ணாமலை…? முதல்வர் விஜய்க்கு காத்திருக்கும் அக்னி பரீட்சை…!!

Published

on

தமிழகத்தில் காலியாக உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முக்கிய அரசியல் தலைவர்கள் களமிறங்க உள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அண்மையில் நடந்த பொதுத்தேர்தலில் தவெக தலைவர் விஜய் இரண்டு இடங்களில் வென்று, திருச்சி கிழக்கு தொகுதி பதவியைத் துறந்தார்.

அத்துடன், அவருக்கு ஆதரவளித்த மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ-க்கள் சிலரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால் திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை உள்ளிட்ட 6 இடங்கள் காலியாகின. இந்தத் தொகுதிகளையும் கைப்பற்றித் தனிப்பெரும்பான்மையை நெருங்க விஜய் வியூகம் வகுத்து வரும் வேளையில், அவரை வீழ்த்த எதிர்க்கட்சிகள் பம்பரமாகச் சுழலத் தொடங்கியுள்ளன.

Advertisement

குறிப்பாக, அம்பாசமுத்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், திருச்சி கிழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைக் களம் இறக்க அக்கட்சியினர் தீவிரமாக முயன்று வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, பாஜகவிலிருந்து விலகி அண்மையில் “வி தி லீடர்ஸ்” என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ள அண்ணாமலையும் கொங்கு மண்டலத்தில் தனது பலத்தை நிரூபிக்கப் பெருந்துறை தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு ஸ்டாலின், சீமான் மற்றும் அண்ணாமலை ஆகிய மூவரும் இடைத்தேர்தல் பந்தயத்தில் நேரடியாகக் குதித்தால், அது ஆளும்கட்சியான தவெகவிற்கும் முதல்வர் விஜய்க்கும் ஒரு மிகப்பெரிய விஷப்பரிட்சையாகவும், ஒரு பொதுத்தேர்தலுக்கு நிகரான உச்சக்கட்ட அரசியல் போராகவும் மாறும் என்று கணிக்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in