தவெக ஆட்சியில் தமிழகத்திற்கு ₹15 லட்சம் கோடி கடனா?.. மேடையில் அண்ணாமலை வெடிக்க வைத்த மெகா பாம்.. பரபரக்கும் அரசியல் களம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தவெக ஆட்சியில் தமிழகத்திற்கு ₹15 லட்சம் கோடி கடனா?.. மேடையில் அண்ணாமலை வெடிக்க வைத்த மெகா பாம்.. பரபரக்கும் அரசியல் களம்..!!

Published

on

தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் முடிவில் தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடன் 15 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என்று ‘We The Leaders’ அமைப்பின் மாநாட்டில் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக அரசு ஒவ்வொரு ஆண்டும் 80,000 கோடி ரூபாய்க்குக் குறைவாகக் கடன் வாங்க வாய்ப்பில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், நடப்பு ஆண்டிலேயே சுமார் 85,000 கோடி ரூபாய் கடன் வாங்கப்படப் போவதாகவும் குற்றம் சாட்டினார். இந்த நிதியாண்டுக்கான கடன் சுமை, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கும் என்றும் அவர் தனது உரையில் கவலை தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர்,மாநிலத்தின் இந்த அபாயகரமான கடன் நிலையைச் சரிசெய்து, தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டுமெனில் தகுதியான மற்றும் நல்ல தலைவர்களைப் பதவியில் அமர வைக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தினார். ‘We The Leaders’ மாநாட்டில் அவர் முன்வைத்த இந்த நிதியாதாரப் புள்ளிவிவரங்களும், தவெக அரசுக்கு எதிரான விமர்சனங்களும் அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. தவெக அமைச்சர்கள் ஆரோக்கிய அரசியல் குறித்துப் பேசி வரும் வேளையில், அண்ணாமலையின் இந்த அதிரடித் தாக்குதல் தமிழக அரசியல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in