LATEST NEWS
“நாங்கள் களத்தில் இறங்கினால் என்ன ஆவீர்கள்..?” விஜய் ரசிகர்களுக்கு சீமான் கொடுத்த மரண மாஸ் எச்சரிக்கை.. சூடான தமிழக அரசியல்..!!
சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகத்தாரை மறைமுகமாகச் சாடிப் பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பிளாக் டிக்கெட் விற்றுப் பிழைப்பு நடத்தியவர்கள் எல்லாம் எங்களைப் பார்த்துத் திரள்நிதி வசூலிக்கும் கூட்டம் எனக் விமர்சிக்கலாமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நடிகனுக்கும் உண்மையான தலைவனுக்கும் வித்தியாசம் தெரியாத கூட்டம் இது. நாங்களும் முழுமையாகக் களத்தில் இறங்கிச் செயல்பட்டால் உங்கள் நிலைமை என்னவாகும்? என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
அதனை தொடர்ந்து தனது சொந்தப் பயன்பாடுகள் மற்றும் நிதியுதவி குறித்து எழும் விமர்சனங்களுக்கும் அதே மேடையில் பதிலளித்த சீமான், “நான் என்ன கோவணம் கட்டிக் கொண்டுதான் திரிய வேண்டுமா? நாங்களெல்லாம் சொந்தமாகக் கார் வாங்கக்கூடக் கூடாதா?” என்று ஆவேசத்துடன் வினவினார். தவெக மற்றும் நாம் தமிழர் கட்சியினருக்கு இடையே சோஷியல் மீடியாவிலும் களத்திலும் காரசாரமான விவாதங்கள் நடந்து வரும் சூழலில், சீமானின் இந்தப் பேச்சு இரு தரப்புக்கும் இடையே அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
