LATEST NEWS
“படிக்க வந்த இடத்தில் இப்படி ஒரு கொடுமையா..?” கோதுமை அரைக்க அனுப்பிய எச்.எம்.. அரசுப் பள்ளி மாணவனுக்கு நேர்ந்த கொடூரச் சோகம்.. வைரலாகும் சிறுவனின் கண்ணீர் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர் ஒருவர், தனது ஒரு கண்ணின் பார்வையை இழந்துள்ள சோகச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காயமடைந்த சிறுவன் தனக்கு நேர்ந்த விபத்தைப் பற்றி கூறிய வீடியோ வைரலாகி வருகிறது. மதிய உணவுத் திட்டத்திற்காக கோதுமையை அரைத்து வருமாறு, பள்ளி முதல்வர் அந்த மாணவனை வெளியே அனுப்பியதாகக் கூறப்படுகிறது. கோதுமையை அரைத்து முடித்த பிறகு, மாவுப் பையைத் தனது மிதிவண்டியில் வைத்து ரப்பர் பட்டையால் கட்ட முயன்றபோது, எதிர்பாராதவிதமாக ரப்பர் பட்டை அறுந்து மாணவனின் கண்ணில் பலமாகத் தாக்கியுள்ளது.
यूपी के सरकारी स्कूल का हाल👇
गोरखपुर के सरकारी स्कूल में पढ़ने वाले बच्चे की एक आंख की रोशनी चली गई.
दरअसल, प्रिंसिपल ने बच्चे को मिड-डे मील का गेहूं पिसवाने भेजा.
गेहूं पिसवाने के बाद बच्चा साइकिल पर आटे की बोरी बांध रहा था, तभी रबर छिटककर उसकी आंख में जा लगा.
चोट… pic.twitter.com/O314JDBPbw— Ranvijay Singh (@ranvijaylive) August 1, 2026
இந்தக் கடுமையான காயத்தின் காரணமாக, அந்த மாணவன் தனது ஒரு கண்ணின் பார்வையை முற்றிலும் இழந்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்விக்காகச் செயல்பட வேண்டிய அரசுப் பள்ளியில், சமையல் தேவைகளுக்காக மாணவனை வெளியே அனுப்பியது பள்ளி நிர்வாகத்தின் கடுமையான அலட்சியத்தைக் காட்டுகிறது. இச்சம்பவம் உத்தரப் பிரதேச அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்விகளையும், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
