LATEST NEWS
“ஹெல்மெட் போட மாட்டேன்..!” அடம்பிடித்த பயணியை ஒரே வார்த்தையில் சைலன்ட் ஆக்கிய டிரைவர்… இணையத்தில் வைரலாகும் சுவாரஸ்ய சம்பவம்..!!
இரவு நேரத்தில் ரோகிணி செக்டார் 37-லிருந்து அம்பேத்கர் மருத்துவமனைக்குச் செல்ல ஒரு பைக் டாக்சி ஓட்டுநர் சவாரியை ஏற்றுக்கொண்டார். பயணி வண்டியில் ஏறும் முன் ஓடிபி சரிபார்க்கப்பட்டது. அதன் பின் ஓட்டுநர் தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காக வைத்திருந்த புதிய ஹெல்மெட்டை அணியுமாறு பயணியிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், அந்தப் பயணியோ இரவு நேரம் என்பதால் போலீஸ் யாரும் தடுக்க மாட்டார்கள் என்று கூறி ஹெல்மெட் அணிய மறுத்துவிட்டார்.
एक बाइक टैक्सी ड्राइवर ने रात के समय एक Ride Accept की।
Pickup सेक्टर 37 रोहिणी से था,
और Drop अम्बेडकर हॉस्पिटल के पास।
Passenger बाइक पर बैठने ही वाला था,
तभी ड्राइवर ने कहा,
“सर, पहले OTP बता दीजिए।”
OTP Verify होने के बाद उसने Passenger से कहा,
“सर, ये Helmet पहन… pic.twitter.com/IGw1axQfGG— Vipendra Kumar (@askvipendra) August 2, 2026
இதைக் கேட்ட ஓட்டுநர், இந்தச் சவாரியின் கட்டணம் வெறும் ரூ.60 மட்டும்தான், ஆனால் ஹெல்மெட் அணியாமல் போலீசிடம் மாட்டினால் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை அபராதம் கட்ட வேண்டியிருக்கும் என்று தெளிவாக விளக்கினார். மேலும், ஹெல்மெட் அணிய விருப்பமில்லை என்றால் சவாரியை ரத்து செய்துவிடுமாறு ஓட்டுநர் உறுதியாகக் கூறியவுடன், பயணி அமைதியாக ஹெல்மெட்டை அணிந்துகொண்டார். விபத்துகளும் அபராதங்களும் நேரத்தைப் பார்த்து வருவதில்லை என்றும், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவருமே ஹெல்மெட் அணிவது அவசியம் என்றும் ஓட்டுநர் அவருக்குப் புரியவைத்தார்.
