அனைத்து மகளிருக்கும் ரூ.2,500 கொடுப்பேன்னு சொல்லிட்டு இப்படியா..? மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்’ திடீர் தகுதி நீக்க விதிகள்..? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அனைத்து மகளிருக்கும் ரூ.2,500 கொடுப்பேன்னு சொல்லிட்டு இப்படியா..? மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்’ திடீர் தகுதி நீக்க விதிகள்..? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!!!

Published

on

தமிழ்நாட்டில் 60 வயது வரையிலான அனைத்து மகளிருக்கும் தங்களது கட்சியின் ‘மதிப்புமிகு மகளிர் திட்டத்தின்’ கீழ் மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என தமிழக வெற்றி கழகம் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், தற்பொழுது இத்திட்டத்திற்கான உதவித்தொகை கணிசமாக உயர்த்தப்பட்டாலும், அரசின் ஒட்டுமொத்த நிதிச்சுமையைக் கருத்தில் கொண்டு, பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க தவெக தலைமை புதிய தகுதி விதிகளில் மாற்றங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் நிதிநிலைமையைக் காரணம் காட்டி அரசு ஊழியர்கள், சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் குறிப்பிட்ட ஆண்டு வருமானத்திற்கு மேல் உள்ள குடும்பங்களை இத்திட்டத்தில் இருந்து நீக்கி, பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது. அதே போன்றதொரு தகுதி நீக்க விதிகளையும், கட்டுப்பாடுகளையும் தற்பொழுது தவெகவும் தங்களது ரூ.2,500 வழங்கும் திட்டத்தில் கொண்டு வர வாய்ப்புள்ளதாக எழுந்துள்ள விமர்சனங்கள் பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in