“உன்ன காப்பாத்துனதுக்கு இதுதான் தண்டனையா..?” கிணற்றில் விழுந்த காட்டெருமையை மீட்ட வனத்துறை.. வெளியே வந்ததும் காத்திருந்த அதிர்ச்சி.. தெறித்து ஓடிய அதிகாரிகள்.. பரபரப்பு வீடியோ வைரல்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உன்ன காப்பாத்துனதுக்கு இதுதான் தண்டனையா..?” கிணற்றில் விழுந்த காட்டெருமையை மீட்ட வனத்துறை.. வெளியே வந்ததும் காத்திருந்த அதிர்ச்சி.. தெறித்து ஓடிய அதிகாரிகள்.. பரபரப்பு வீடியோ வைரல்…!!

Published

on

  • திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான கொடைக்கானல் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக காட்டெருமைகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றில் இருந்த ஆழமான திறந்தவெளி கிணற்றுக்குள் காட்டெருமை ஒன்று எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காட்டெருமையின் உடலில் கயிறுகளைக் கட்டி, அதனைப் பத்திரமாக கிணற்றிற்கு வெளியே மீட்டு தூக்கினர்.

ஆனால், கிணற்றிலிருந்து வெளியே வந்த அடுத்த கணமே, மரண பயத்திலும் ஆக்ரோஷத்திலும் இருந்த அந்த காட்டெருமை, தன்னை மீட்ட வனத்துறை அதிகாரிகளையே முட்டித் தூக்குவதற்காக மிக வேகமாகப் பாய்ந்து ஓடி வந்தது. காட்டெருமையின் இந்த திடீர் தாக்குதலால் நிலைதடுமாறிய வனத்துறையினரும், அங்கிருந்த பொதுமக்களும் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பதறிப்போய் நாலாபுறமும் சிதறி ஓடினர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட காட்டெருமை அதிகாரிகளைத் துரத்தும் இந்த திக் திக் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகின்றன.

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in