தினமும் நைட் என்ன நடக்கு தெரியுமா..? 4 பிள்ளைகளைத் தவிக்கவிட்டு காதலனுடன் ஓட்டம்… 25 நாட்களுக்குப் பின் சிக்கிய தாய்.. நீதிமன்றத்தில் கணவர் குறித்து உடைத்த பகீர் உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

தினமும் நைட் என்ன நடக்கு தெரியுமா..? 4 பிள்ளைகளைத் தவிக்கவிட்டு காதலனுடன் ஓட்டம்… 25 நாட்களுக்குப் பின் சிக்கிய தாய்.. நீதிமன்றத்தில் கணவர் குறித்து உடைத்த பகீர் உண்மை..!!

Published

on

உத்தரப்பிரதேச மாநிலம் ஏட்டா மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகளின் தாய், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் பழகிய காதலனுடன் திடீரென வீட்டை விட்டு ஓடிப் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர், தனது மனைவியைக் கண்டுபிடித்துத் தருமாறு உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கணவரின் புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு சுமார் 25 நாட்களுக்குப் பிறகு அந்தப் பெண்ணை பத்திரமாக மீட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, தனது கணவருடன் சேர்ந்து வாழ மறுத்த அவர், நீதிமன்றத்தில் தனது கணவர் மீது மிகவும் பரபரப்பான மற்றும் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தனது கணவர் தினமும் இரவில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதாகவும், அத்தோடு நிறுத்தாமல் வெளியில் இருந்து வேறு சில ஆண்களை வீட்டிற்கு அழைத்து வருவதாகவும் அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.

Advertisement

https://twitter.com/MandeepRajBhar9/status/2083501261555720449/video/2

மேலும், அவ்வாறு அழைத்து வரப்படும் அந்நிய ஆண்களுடன் தன்னை தவறான முறையில் பழகுமாறு கணவரே கட்டாயப்படுத்துவதாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலாலேயே தான் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அந்தப் பெண் வாக்குமூலம் அளித்தார். எந்தவொரு சூழ்நிலையிலும் தான் இனி தனது கணவருடன் சேர்ந்து வாழப் போவதில்லை என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in