LATEST NEWS
“2026-ல் நடந்தது போலவே 2031-லும் நடக்கும்!”.. CM விஜய்க்கு அண்ணாமலை விடுத்த அதிரடி சவால்.. அதிரும் தமிழக அரசியல் களம்..!!
பாஜகவில் இருந்து வெளியேறிய அண்ணாமலை, இளைஞர்களையும் மாற்றத்தை விரும்புபவர்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் தொடங்கிய ‘We The Leaders’அமைப்பின் முதல் கொள்கை விளக்க மாநாடு பொள்ளாச்சியில் நடைபெற்றது. “போதையில்லா தமிழகம்” என்ற விழிப்புணர்வு மையக்கருத்துடன் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மதுவிலக்கு தொடர்பான பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை தமிழ்நாட்டில் வரும் 2031-ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு பெரும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அண்ணாமலை கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் தற்போதைய சூடான விவாதப் பொருளாக மாறியுள்ளது. கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் ஏற்பட்டது.
அதனை போலவே அடுத்த ஐந்தாண்டுகளுக்குப் பிறகும் இதே போன்றதொரு மாற்றம் அரங்கேறும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்த கூற்று தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகவே பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் தவெக அரசை உடனடியாகத் தீவிரமாக விமர்சிக்கப் போவதில்லை என அண்ணாமலை ஒருபுறம் குறிப்பிட்டிருந்தாலும், ‘ஆட்சி மாற்றம்’ என்ற அவரது ஒற்றை வார்த்தை முதல்வர் விஜய்யை மட்டுமே குறிவைத்து முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். ‘We The Leaders’ மாநாட்டைத் தொடர்ந்து அடுத்தடுத்து வெளியாகும் அண்ணாமலையின் இத்தகைய அரசியல் கணிப்புகள், தவெக அரசுக்கு எதிரான எதிர்கால அரசியல் வியூகத்தின் தொடக்கமாகவே பார்க்கப்படுவதால் தமிழக அரசியல் களம் அடுத்த கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.
