LATEST NEWS
வேலையில்லையா? கவலையை விடுங்க.. தமிழக அரசு தரும் ரூ.15 லட்சம் கடன்.. வெளியான அதிரடி அறிவிப்பு..!!
படித்துவிட்டு வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு 25% மானியத்துடன் கூடிய சிறப்பான சுயதொழில் கடன் திட்டத்தை அறிவித்துள்ளது. தமிழக அரசின் ‘UYEGP’ திட்டத்தின் கீழ், வியாபாரம் மற்றும் உற்பத்தி சார்ந்த புதிய தொழில்களைத் தொடங்குவதற்கு அதிகபட்சமாக ₹15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் கடனுக்கு அரசு வழங்கும் 25% மானியம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளதால், சொந்தமாகத் தொழில் தொடங்கி சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பதாரர்கள் சில அடிப்படைத் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். அதன்படி, விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ₹8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்தத் தகுதிகளைக் கொண்ட தகுதியான இளைஞர்கள், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.msmeonline.tn.gov.in என்ற முகவரியின் மூலம் ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
