LATEST NEWS
காப்பாத்துங்க காப்பாத்துங்க!…கிளப்பில் கொழுந்துவிட்டு எரியும் தீ… அலறியடித்து ஓடிய மக்கள்! இணையத்தைக் உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!!
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ‘நா லட்ப்ராவ்’ என்ற கேளிக்கை விடுதியில் திங்கள்கிழமை அதிகாலை நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நள்ளிரவு வாக்கில் திடீரென மூண்ட இந்தத் தீயின் காரணமாக, விடுதியின் முன் வாசல் வழியே கரும்புகையுடன் பெருநெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால், உள்ளே இருந்த மக்கள் வெளியேற முடியாமல் அலறியடித்துக்கொண்டு ஓடும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் மீட்புப் படையினரால் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன. சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விரகுல், உயிரிழப்புகளை உறுதி செய்ததுடன், படுகாயமடைந்த பலருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இந்த கோர விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த விபத்து நேரிட்டபோது, அந்த விடுதியில் நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்த இசைக்கலைஞர் ஒருவர் கூறிய தகவல் சம்பவத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது. மேடைக்கு அருகிலிருந்த சர்க்யூட் பிரேக்கரில் இருந்து முதலில் புகை வெளியேறியதாகவும், அடுத்த சில நொடிகளிலேயே மின்சாரம் துண்டிக்கப்பட்டு பெரும் வெடிச்சத்தம் கேட்டதுடன், அடர்த்தியான புகை அந்த இடம் முழுவதும் பரவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன் வாசல் வழியாகத் தீ மற்றும் புகை வேகமாகப் பரவியதால், அங்கிருந்த மக்கள் உயிர் தப்புவதற்காக விடுதியின் பின்பகுதியில் உள்ள கழிவறைகளை நோக்கி ஓடி தஞ்சமடைந்துள்ளனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக தீயின் கோரத் தாண்டவத்தால் அங்கேயே சிக்கிக்கொண்ட பலரின் உடல்கள் அந்த கழிவறைகளிலேயே கண்டெடுக்கப்பட்டதாகப் பிரதமர் அனுதின் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
