“ரூ.50 கோடி வாங்கிட்டு தவெக-வில் ஐக்கியம்?” அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குறித்து திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி குற்றச்சாட்டு.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ரூ.50 கோடி வாங்கிட்டு தவெக-வில் ஐக்கியம்?” அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குறித்து திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி குற்றச்சாட்டு.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!

Published

on

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலா 50 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளதாகக் கூறி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தற்போதைய தவெக ஆட்சியில் அனைத்து அரசுத் துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாகவும் அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இவருடைய இந்த குற்றச்சாட்டு தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

திண்டுக்கல் சீனிவாசனின் இந்த அதிரடிப் புகார்கள் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமோ அல்லது மறுப்போ வெளியிடப்படவில்லை. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து விமர்சித்து வரும் நிலையில், தவெக தரப்பில் இருந்து வரும் பதிலை வைத்தே இந்த அரசியல் சர்ச்சையின் அடுத்தகட்ட நகர்வு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in