காலையிலேயே ஷாக்.! சற்றுமுன் திமுகவிலிருந்து விலகினார்… செம அதிர்ச்சியில் ஸ்டாலின்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காலையிலேயே ஷாக்.! சற்றுமுன் திமுகவிலிருந்து விலகினார்… செம அதிர்ச்சியில் ஸ்டாலின்..!!

Published

on

திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அவரது உதவியாளரின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்து, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சியை விட்டு விலகி வருவதாக திமுக நிர்வாகி ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு பரபரப்பு வீடியோவில், மாவட்டத்தில் நிலவும் உட்கட்சிப் பிரச்சினைகளை இவர்கள் இருவரும் சரியாகக் கையாளுவதில்லை என்றும், கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளைச் சற்றும் மதிப்பதில்லை என்றும் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

மனோ தங்கராஜின் இத்தகைய போக்கின் காரணமாகவே பல முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இருந்து தொடர்ந்து விலகி ஓட்டம் பிடிப்பதாக அந்த வீடியோவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தத் தவறுகளைக் கட்சியின் தலைமை உடனடியாகக் தலையிட்டுச் சரி செய்தால் மட்டுமே, இனிவரும் காலங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக பலம் பெற முடியும் என்றும், இல்லையெனில் கட்சிக்குப் பின்னடைவு ஏற்படும் என்றும் அவர் அந்த வீடியோ பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in