BREAKING: சி.வி.சண்முகம், பசுபதி ஆதரவாளர்கள் மோதல்… திடீர் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: சி.வி.சண்முகம், பசுபதி ஆதரவாளர்கள் மோதல்… திடீர் பரபரப்பு..!!

Published

on

விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. திண்டிவனத்தில் மாவட்ட அதிமுக செயலாளர் பசுபதி தலைமையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் சிலர் முக்கிய நிர்வாகிகளைப் பங்கேற்க விடாமல் தடுக்க முயன்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாகச் செய்திகள் பரவி வரும் நிலையில், இந்த மோதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்ட அதிமுகவுக்குள் நிலவி வந்த சலசலப்பும், பதற்றமும் மேலும் அதிகரித்துள்ளதுடன், தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in