“யம்மாடி…! ராஜநாகத்திற்கு ‘லிப்-கிஸ்’ கொடுக்கப் போன நபர்… அப்புறம் நடந்த ட்விஸ்ட்..! அதிரவைக்கும் ஷாக் வீடியோ..!!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“யம்மாடி…! ராஜநாகத்திற்கு ‘லிப்-கிஸ்’ கொடுக்கப் போன நபர்… அப்புறம் நடந்த ட்விஸ்ட்..! அதிரவைக்கும் ஷாக் வீடியோ..!!!”

Published

on

சமூக ஊடகங்களில் தினமும் பல அதிரடியான வீடியோக்கள் வைரலாவது வழக்கம், ஆனால் சில வீடியோக்கள் பார்ப்பவர்களை அப்படியே உரைய வைத்துவிடும். அந்த வகையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு நடுக்கமூட்டும் வீடியோவில், ஒரு நபர் உலகின் மிக ஆபத்தான பாம்புகளில் ஒன்றான ராஜநாகத்தின் அருகில் அமர்ந்து ஆபத்தான செயலைச் செய்துள்ளார். வெறும் 52 வினாடிகள் மட்டுமே கொண்ட அந்த வீடியோவின் தொடக்கத்தில், அந்த நபர் ஒரு மாபெரும் ராஜநாகத்தின் அருகில் எந்தவித பயமும் இல்லாமல் அமர்ந்திருக்கிறார். அதன் பிறகு, அவர் பாம்பின் கண்களை நேருக்கு நேர் பார்த்து, மெதுவாக அதன் தலைப்பகுதிக்கு அருகில் சென்று அதை முத்தமிடுகிறார்.

பாம்புகள் எவ்வளவு அமைதியாகத் தெரிந்தாலும் அவற்றை ஒருபோதும் நம்பக்கூடாது என்பதை நிரூபிக்கும் வகையில் அடுத்த சில நொடிகளில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடக்கிறது. அந்த நபர் ராஜநாகத்தின் தலையில் முத்தமிட்ட அடுத்த கணமே, அந்தப் பாம்பு கடுமையான கோபமடைந்து மின்னல் வேகத்தில் அவரைத் தாக்கப் பாய்கிறது. நல்லவேளையாக, அந்த நபரின் சுதாரிப்புத் திறன் மிக வேகமாக இருந்ததால், அவர் உடனடியாக பின்னோக்கி நகர்ந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டார். ஒருவேளை அவர் சற்றே அசைவதற்குத் தாமதித்திருந்தாலும், அந்தப் பாம்பின் விஷக்கடியால் அவரது உயிர் பிரிந்திருக்கும்.

Advertisement

https://www.instagram.com/reel/DYyd5rNyQNO/?utm_source=ig_web_button_share_sheet

நெஞ்சை பதறவைக்கும் இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது. இது வெளியான குறுகிய காலத்திலேயே 7 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதைப் பார்த்த சமூக ஊடகப் பயனர்கள் பலரும், இதனை “மரண முத்தம்” என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், ‘பாம்புகளை ஒருபோதும் நம்பக்கூடாது, ஒரு சிறிய தவறு நடந்திருந்தாலும் நேராக எமராஜனைத் தான் சந்தித்திருக்க வேண்டும்’ என்று அந்த நபரின் பொறுப்பற்ற செயலைக் கண்டித்து தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in