LATEST NEWS
BREAKING: AMMK MLA-வை தகுதிநீக்கம் செய்யக்கோரி திடீர் மனு!.. உச்சகட்ட பரபரப்பில் தமிழக அரசியல்..!!
அமமுக எம்.எல்.ஏ. காமராஜை தகுதிநீக்கம் செய்யக் கோரி, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் அக்கட்சியின் பொருளாளர் கரிகாலன் அதிகாரப்பூர்வமாக மனு அளித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிக்கு ஆதரவளிப்பதற்காகக் குதிரை பேரம் நடைபெற்றதாகவும், கட்சித் தலைமையின் எந்தவித அனுமதியும் உத்தரவும் இன்றி அவர் அரசுக்கு ஆதரவு தெரிவித்துச் செயல்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆளுநர் ஆர்.என். அர்லேக்கரிடம் நேரில் புகார் அளித்துள்ள நிலையில், தற்போது சபாநாயகரிடமும் மனு அளிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சித் தலைமைக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் இந்த விவகாரம் குறித்து சபாநாயகரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
