LATEST NEWS
இவர்தான்யா நிஜ ஹீரோ..! உயிரைப் பணயம் வைத்து 7 மாதக் குழந்தையை… காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்..! இணையத்தில் குவியும் பாராட்டுகள்..!!
இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில், நிலச்சரிவு ஏற்பட்ட அபாயகரமான மலையகப் பாதையில் 7 மாதக் குழந்தையைக் காப்பாற்ற ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவர் தன் உயிரைப் பணயம் வைத்துள்ளார். பருவமழை காரணமாகப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்ட சூழலில், அந்தச் சிறிய குழந்தையைப் பத்திரமாகக் கரையேற்றிய அவரது தீரச் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் பெரிய பாறைகளும், சேறும் சகதியும் சாலையை அடைத்திருந்தன. எந்நேரமும் மேலிருந்து கற்கள் உருண்டு விழும் அபாயம் இருந்தபோதிலும், ஆரஞ்சு நிற ஜாக்கெட் அணிந்திருந்த அந்த ஆம்புலன்ஸ் ஊழியர் குழந்தையைத் தன் நெஞ்சோடு அணைத்தபடி, கவனமாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து ஆபத்தான பகுதியைக் கடந்து சென்றார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் அந்த ஊழியரின் தியாக உணர்வைப் பாராட்டி, “உண்மையான கதாநாயகன்” எனக் கொண்டாடி வருகின்றனர்.
தற்போது இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சம்பா உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவுகளும் திடீர் வெள்ளப் பெருக்குகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால் முக்கியச் சாலைகள் துண்டிக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ள நிலையிலும், ஆம்புலன்ஸ் மற்றும் மீட்புக் குழுவினர் அவசர மருத்துவ உதவிகளை வழங்கத் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் நடந்தே சென்று பணியாற்றி வருகின்றனர்.
