LATEST NEWS
“100% பொருந்திய DNA மேட்ச்..! உண்மையான குற்றவாளி யார் தெரியுமா..? போக்சோ வழக்கில் அம்பலமான அதிர்ச்சி உண்மை… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!”
ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்றம், டி.என்.ஏ பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் ஒரு இளைஞர் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்கு எஃப்.ஐ.ஆரை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் குற்றஞ்சாட்டப்பட்டவரை முற்றிலும் நிரபராதி என்று நிரூபிக்கும் போது, அவர் மனரீதியான மற்றும் சட்டரீதியான அலைக்கழிப்புகளை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிபதி ராகேஷ் கைந்த்லாவின் அமர்வு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த வழக்கு 2023 ஆம் ஆண்டு ஹிமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் தொடங்கியது. பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், ஆயுஷ் என்ற இளைஞர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376, 506 மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2023 மார்ச் மாதம் ஆயுஷ் தனது வீட்டிற்குள் புகுந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும், அதனால் தான் கர்ப்பமாகி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததாகவும் அச்சிறுமி புகார் அளித்திருந்தார்.
ஆனால், தடம் அறிவியல் ஆய்வகத்தில் நடைபெற்ற டி.என்.ஏ பரிசோதனையில் அந்த இளைஞரின் டி.என்.ஏ குழந்தையுடன் பொருந்தவில்லை. தொடர்ந்து சந்தேகத்திற்குரிய நபர்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் சொந்த சகோதரரின் டி.என்.ஏ குழந்தையுடன் 100% பொருந்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பிறகு சிறுமியும் தனது சகோதரருடன் தான் உடலுறவு கொண்டதாகக் கூடுதல் வாக்குமூலம் அளித்ததை அடுத்து, ஆயுஷ் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என உறுதி செய்யப்பட்டு, அவர் மீதான வழக்கினை நீதிமன்றம் முற்றிலும் ரத்து செய்தது.
