“இப்படியும் ஒரு பையனா..! கேமரா வாங்கறேன்னு பொய் சொல்லி கூட்டிட்டு போய்… முதல் சம்பளத்துல என்ன பண்ணியிருக்காரு பாருங்க…?!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இப்படியும் ஒரு பையனா..! கேமரா வாங்கறேன்னு பொய் சொல்லி கூட்டிட்டு போய்… முதல் சம்பளத்துல என்ன பண்ணியிருக்காரு பாருங்க…?!”

Published

on

மும்பையைச் சேர்ந்த கேஷவ் நாராயண் பிஷ்ட் என்பவர், தனது முதல் ஆன்லைன் வருமானத்தில் இருந்து தந்தைக்குப் புதிய ஷூக்களைப் பரிசளித்து ஆச்சரியப்படுத்திய நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இளைஞர்கள் வழக்கமாகத் தங்களின் முதல் சம்பளத்தில் மொபைல், ஆடைகள் அல்லது எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கும் நிலையில், கேஷவ் தன் தந்தைக்குச் சிறப்புப் பரிசு அளிக்கத் திட்டமிட்டார்.

தன் தந்தைக்கு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்பிய கேஷவ், வீடியோ தயாரிப்பிற்குப் புதிய கேமரா வாங்கப்போவதாகக் பொய் கூறி தந்தையை அழைத்துச் சென்றுள்ளார். கேமரா கடைக்குச் செல்வதாக நினைத்துச் சென்ற தந்தையை, கேஷவ் நேரடியாக ஒரு பெரிய பிராண்டட் ஷூ ஷோரூமிற்கு அழைத்துச் சென்றார். அங்குத் தன் தந்தைக்குப் பிடித்தமான ஒரு ஜோடி பிராண்டட் ஷூக்களைத் தேர்ந்தெடுத்தார்.

Advertisement

https://www.instagram.com/reel/DbI5zkVPuYQ/?utm_source=ig_web_button_share_sheet

அந்த ஷூக்கள் தனக்கான பரிசு என்பதை அறிந்த தந்தை, ஒரு கணம் பிரமித்துப்போய், பின்பு பெருமிதத்துடனும் மகிழ்ச்சியுடனும் தன் மகனைக் கட்டித் தழுவினார். “அப்பா, நீங்கள் மிகவும் விலைமதிப்பற்றவர்” என்ற தலைப்புடன் பகிரப்பட்ட இந்த உணர்ச்சிப்பூர்வமான வீடியோ இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளதுடன், பலரும் மகனின் நற்பண்புகளைப் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in