“சாமி அமைச்சர்” தவெக அமைச்சர் ரமேஷை வறுத்தெடுத்த திமுக எம்.எல்.ஏ… குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சாமி அமைச்சர்” தவெக அமைச்சர் ரமேஷை வறுத்தெடுத்த திமுக எம்.எல்.ஏ… குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!!

Published

on

தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் குறித்து திமுக எம்.எல்.ஏ எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், “மாண்புமிகு சாமி அமைச்சர்.. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்..” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுத் தனது பேச்சைத் தொடங்கினார். இதைக் கேட்டதும் அவையிலிருந்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், கட்டுப்படுத்த முடியாமல் குலுங்கி, குலுங்கிச் சிரித்தார்.

தொடர்ந்து பேசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சமூக வலைதளங்களில் உலா வரும் செய்திகளைச் சுட்டிக்காட்டி விவாதத்தைக் கிளப்பினார். “உண்மையா, பொய்யா என்று கூடத் தெரியாமல் சமூக வலைதளங்களில் வெளியாகும் அமைச்சர் ரமேஷின் ரீல்ஸ் கன்டென்டை அப்படியே எடுத்து இங்குப் பேசுகிறார்கள்” என்று அவர் விமர்சித்தார். யதார்த்தமான உண்மைகளை மட்டுமே தாங்கள் பேசுவதாகவும் அவர் சபையில் விளக்கமளித்தார்.

Advertisement

அரசியல் ரீதியான இந்த விமர்சனத்தையும், கிண்டலையும் சற்றும் கோபப்படாமல் ரசித்த முதலமைச்சர் விஜய், இறுதிவரை சிரித்த முகத்துடனேயே அந்தப் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த சுவாரசியமான மற்றும் நகைச்சுவையான விவாதத் தருணம் சட்டப்பேரவையில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியதோடு, சமூக வலைதளங்களிலும் தற்போது விவாதப் பொருளாக மாறி வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in