LATEST NEWS
திமுக-பாஜக கூட்டணி..? உண்மையை போட்டு உடைத்த துரைமுருகன்.. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..!!
பாஜகவுடன் எந்தவிதமான உறவும் இல்லை என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில், தங்களது கொள்கையும் பாஜகவின் கொள்கையும் முற்றிலும் வேறுபட்டவை என்று குறிப்பிட்ட அவர், சட்டமன்றத்தில் ஒத்துப்போவோம் என்று ஒருவரைக் குறிப்பிடுவதன் மூலம் பாஜக யாருடைய பின்னணியில் செயல்படுகிறது என்பது தெளிவாகிறது என்றும் விமர்சித்துள்ளார்.
இதற்கிடையே, அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற சபாநாயகரின் தேநீர் விருந்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கலந்துகொண்டது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியதுடன், அது புதிய கூட்டணிக்கான சமிக்ஞை என்றும் பேசப்பட்டது. இந்தச் சூழலில் துரைமுருகனின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
