“என் டேபிளில் 3 பைல்கள் இருக்கு… ஓபன் பண்ணுவதற்கு முன் இன்று ஒரு சாம்பிள்” 3 முக்கிய கோப்புகளுடன் திமுகவை கதிகலங்க வைத்த முதலமைச்சர் விஜய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் டேபிளில் 3 பைல்கள் இருக்கு… ஓபன் பண்ணுவதற்கு முன் இன்று ஒரு சாம்பிள்” 3 முக்கிய கோப்புகளுடன் திமுகவை கதிகலங்க வைத்த முதலமைச்சர் விஜய்..!!

Published

on

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் ஜோசப் விஜய், கடந்த திமுக ஆட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களைக் கேட்டு சவால் விடுத்த எதிர்க்கட்சியினருக்கு அதிரடியான பதிலடி கொடுத்துள்ளார். “கடந்த திமுக ஆட்சிக்கால ஊழல்கள் குறித்து எனது மேஜையில் இருக்கும் 3 முக்கியத் துறைகளின் கோப்புகளைநான் திறந்து ஆதாரங்களை வெளியிடுவதற்கு முன்பாக, இன்று ஒரு சிறிய சாம்பிளை உங்களுக்குக் காட்டுகிறேன்” என்று முதலமைச்சர் விஜய் பேரவையில் முழங்கினார். திமுக அரசு செய்த முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ‘கரூர் கேங்’ தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வ டாக்குமென்ட் தன்னிடம் உள்ளதாகக் கூறி அவர் அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

முதலமைச்சர் விஜய் தனது உரையில், கடந்த ஆட்சிக்காலத்தில் கட்சி நிதியின் பெயரால் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பணம் வசூலித்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ள விபரங்களை அடுக்கடுக்காகப் பட்டியலிட்டார். மேலும், திமுகவினர் தங்களின் ஊழல் ஆதாரங்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால், 1988 ஆம் ஆண்டு வெளியான சர்க்காரியா கமிஷன் அறிக்கையைத் படித்துப் பார்க்க வேண்டும் என்றும், அதுவே அவர்களின் அதிகார துஷ்பிரயோகத்திற்குப் பெரிய சான்று என்றும் அவர் சாடினார். சரியான நேரத்தில் இந்த 3 கோப்புகளும் முழு ஆதாரங்களுடன் மக்கள் மன்றத்தில் திறக்கப்படும் என்று கூறி, திமுக உறுப்பினர்களின் அமளிக்கு நடுவே முதலமைச்சர் விஜய் தனது கடுமையான எச்சரிக்கையைப் பதிவு செய்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in