LATEST NEWS
மிசாவை கொச்சைப்படுத்தும் சிஎம் விஜய்… அரை மணி நேரமாவது அந்தத் தாக்குதலைத் தாங்குவாரா..? – சிபிஎம் பாலகிருஷ்ணன் அதிரடி கேள்வி..!!
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “மிசா தாக்குதலை நியாயப்படுத்தி, கொச்சைப்படுத்துகிறார் முதலமைச்சர். அதே தாக்குதலை இவர் அரை மணிய நேரமாவது தாங்கிக் கொள்வாரா?” என்று கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மீது முதலமைச்சர் விஜய் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதிலடியாக இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
சட்டமன்ற நேரலை மற்றும் இந்த விவாதங்கள் தொடர்பாக ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், சிபிஎம் தலைவரின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திமுக எம்பி தயாநிதி மாறன் முதலமைச்சரின் மிசா குறித்த பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இடதுசாரித் தலைவரான கே.பாலகிருஷ்ணனும் முதலமைச்சருக்கு எதிராகக் களமிறங்கியுள்ளார்.
