“என் தெருவுலயே போதைப்பொருள் விக்கிறாங்கய்யா..” போலீஸ்கிட்ட சொல்லியும் பிரயோஜனமில்ல… ஃபினையில் குடித்து கதறிய நபர்..! கலெக்டர் ஆபீஸ் வாசலில் நடந்த பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் தெருவுலயே போதைப்பொருள் விக்கிறாங்கய்யா..” போலீஸ்கிட்ட சொல்லியும் பிரயோஜனமில்ல… ஃபினையில் குடித்து கதறிய நபர்..! கலெக்டர் ஆபீஸ் வாசலில் நடந்த பகீர் சம்பவம்..!!

Published

on

பஞ்சாப் மாநிலம் சங்கரூர் மாவட்டத்தில் உள்ள சுனாம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நமோல் கிராமத்தைச் சேர்ந்த ஜக்சிர் சிங் (என்ற) ஜக்கா என்பவர், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மனமுடைந்து, ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே ஃபினையில் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்தவர்கள் மற்றும் அவருடைய நண்பர் அவரை உடனடியாக மீட்டு சிவில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக பட்டியாலாவில் உள்ள ராஜேந்திரா மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அவரை மாற்றினர்.

ஜக்சிர் சிங் தன் கிராமத்தில் பகிரங்கமாக நடைபெற்று வரும் போதைப்பொருள் வியாபாரத்தை தடுப்பதற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார். அவருடைய வீட்டின் தெருவிலேயே போதைப்பொருட்கள் விற்கப்பட்டபோதிலும், இது குறித்து புகார் அளித்த கிராம ஊராட்சித் தலைவரோ அல்லது உள்ளூர் காவல் துறையினரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், புகார் அளித்தால் ஆத்திரமடைந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சமீபத்தில் ஜெகசீரின் வீட்டிற்குள் புகுந்து அவரையும் அவருடைய குடும்பத்தினரையும் தாக்கியுள்ளனர். இந்த அச்சுறுத்தல் மற்றும் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கின் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

Advertisement

இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி ஆளும் பஞ்சாப் அரசை நோக்கி எதிர்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு, பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் சச்சின் பைலட் மற்றும் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி ஆகியோர் மாநில அரசைக் கடுமையாகச் சாடியுள்ளனர். முதலமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே போதைப்பொருளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனத் தலைவர்கள் சாடியுள்ள நிலையில், இப்புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in