“நள்ளிரவில் நடந்த பயங்கரம்..” காரில் ஏறப்போன ஐடி பெண் ஊழியர்.. பின்னாலிருந்து பாய்ந்து அத்துமீறிய செக்யூரிட்டி… நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“நள்ளிரவில் நடந்த பயங்கரம்..” காரில் ஏறப்போன ஐடி பெண் ஊழியர்.. பின்னாலிருந்து பாய்ந்து அத்துமீறிய செக்யூரிட்டி… நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

ஐதராபாத் கச்சிபவுலி பகுதியில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் ஒருவருக்குப் பாதுகாப்பு ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பணி முடிந்து அந்த இளம்பெண் தனக்காக வரவழைக்கப்பட்ட கால் டாக்சியில் ஏற முயன்றபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற ஊழியர், எதிர்பாராத விதமாக அவரைப் பலவந்தமாக இழுத்துக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தமிடவே, பயந்துபோன அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் கச்சிபவுலி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த பாதுகாப்பு ஊழியரின் அத்துமீறல் அப்பட்டமாகத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த குற்றவாளி ராஜ்குமாரை போலீசார் விரைந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in