LATEST NEWS
“இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை..!” பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கூட்டுச் சதியை அம்பலப்படுத்திய காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆகியவை கூட்டு சேர்ந்து மிகப்பெரிய சதித் திட்டத்தை அரங்கேற்றியுள்ளதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் 10 மாத புலனாய்வுத் தரவுகளை மேற்கோள் காட்டி அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டு மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் எழுத்துப்பூர்வ ஆட்சேபனைகளைப் புறந்தள்ளியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் தேர்தல் விதிகளை மீறி, சுமார் 12 கோடி வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுப் ‘வெளிப்படையான ஜனநாயகப் படுகொலை’ செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.
ஜனநாயகத்தை முடக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் இந்தச் செயல்பாட்டைக் கண்டித்தும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரியும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது சென்னை அண்ணா சாலை தர்கா மற்றும் தாரப்பூர் டவர் அருகில், 2026 செப்டம்பர் 25 நாளை பிற்பகல் 2 மணியளவில் மாணிக்கம் தாகூர் தலைமையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
