LATEST NEWS
“எப்பா தி.மு.க.. மூத்தவங்களே… பருப்புல ஒசந்தது முந்திரி” CM விஜய்யிடம் அனுமதி கேட்டு… திமுகவை ஒரே டயலாக்கில் அதிரவிட்ட நிர்வாகி..!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் முன்னிலையில், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகி பேசிய அரசியல் ‘பஞ்ச்’ வசனம் தற்போது இணையதளங்களில் அனல் பறந்து வருகிறது தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற இந்த மேடையில், திமுகவின் மூத்த தலைவர்களை நோக்கி இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
பரப்புரை மேடையில் பேசிய தவெக நிர்வாகி, முதலமைச்சர் விஜயை நோக்கி, “அண்ணே அண்ணே.. திமுகவை ஒரே ஒரு டயலாக் சொல்லி விமர்சிக்கிறேனே..” என்று முதலில் பொதுவெளியில் அவரிடமே அனுமதி (பர்மிஷன்) கேட்டார். விஜய் அதற்குப் புன்னகையோடு சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் தனது பாணியில் அடுக்குமொழி வசனத்தைப் பேசத் தொடங்கினார்.
திமுகவினரை வம்பிழுக்கும் வகையில், “எப்பா தி.மு.க.. மூத்தவங்களே… பருப்புல ஒசந்தது முந்திரி… பதவில ஒசந்தது மந்திரி.. எங்க அண்ணன் தான் இப்போ முதல் மந்திரி..” என அவர் ஆக்ரோஷமாக முழங்கினார். தவெக நிர்வாகியின் இந்த ரைமிங் அரசியல் வசனத்தைக் கேட்டு அங்கிருந்த தொண்டர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்ய, இந்த சுவாரசியமான விமர்சன வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
