“வெளியில் சொன்னால் கொலை செய்திடுவேன்..!” தனியார் பள்ளி கழிப்பறையில் -ஆம் வகுப்பு சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. காமக்கொடூரனின் வெறிச்செயல்.. நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“வெளியில் சொன்னால் கொலை செய்திடுவேன்..!” தனியார் பள்ளி கழிப்பறையில் -ஆம் வகுப்பு சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. காமக்கொடூரனின் வெறிச்செயல்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

கர்நாடகா மாநிலம் பெங்களூரு ராமநகர் மாவட்டம் கனகபுரா பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்குக் கழிவறையில் பாலியல் தொல்லை கொடுத்த தூய்மை பணியாளரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 25-ந் தேதி பள்ளிக்குச் சென்ற அந்த மாணவி, இயற்கை உபாதை கழிப்பதற்காகக் கழிவறைக்குச் சென்றபோது அங்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த நபர் சிறுமிக்குக் கடுமையான பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி சத்தம் போட முயன்றபோது, அந்த நபர் சிறுமியின் வாயைப் பொத்தியதோடு, இதைப்பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி அழுதுகொண்டே இதுகுறித்து ஆசிரியரிடம் கூற, பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் சிறுமியின் பெற்றோருக்கு விபரம் தெரிவிக்கப்பட்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த தூய்மைப் பணியாளரை நேற்று தீவிரமாகத் தேடி மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கைதான நபர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்ததும், தனது ஓய்வு நேரத்தில் இந்தத் தனியார் பள்ளியில் பகுதிநேரமாகக் கழிவறைகளைச் சுத்தம் செய்யும் பணியைச் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in