LATEST NEWS
“பாத்ரூம் போகக் கூட போகமுடியல” ஒரே மன அழுத்தமா இருக்கு… ₹70,000 அரசு வங்கி வேலை வேண்டாம்…கண்ணீருடன் ராஜினாமா செய்த இளம் பெண்..!!
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மதுரிமா (31) என்ற பெண், 2 ஆண்டுகள் தீவிரமாகப் படித்து IBPS தேர்வு மூலம் ஒரு பொதுத்துறை வங்கியில் ₹70,000 சம்பளத்தில் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். ஆனால், அவர் பணிபுரிந்த வங்கியின் சூழல் மிகவும் மோசமாகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. தினமும் 12 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டதோடு, விடுமுறைகளும் மறுக்கப்பட்டன. கழிப்பறைக்குச் செல்லக்கூட அனுமதி மறுக்கப்பட்டதால், அவருக்குக் கடுமையான சிறுநீரகத் தொற்றும் ஏற்பட்டது.
அதுமட்டுமன்றி, மூத்த அதிகாரிகளின் தரக்குறைவான பேச்சுகள், திருமணத்திற்குப் பிறகு குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியாத நிலை மற்றும் தொடர்ச்சியான பணிச் சுமையால் அவர் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானார். இதனால், தினமும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து அழுவதாகவும், தவறான எண்ணங்கள் தோன்றும் அளவிற்கு மன அமைதி குறைந்ததாகவும் தெரிவித்துள்ளார். இறுதியில், இந்த நச்சுத்தனமான வேலைச் சூழலில் இருந்து விடுபட முடிவு செய்த அவர், தனது மன அமைதிக்காக ₹2 லட்சம் பாண்ட் தொகையை அபராதமாகச் செலுத்தி 2024 மார்ச் மாதத்தில் வேலையை ராஜினாமா செய்தார்.
அரசு வேலையைத் துறந்த பிறகு, அவர் LinkedIn மூலம் பெங்களூரைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் ₹35,000 சம்பளத்திற்கு (பாதி சம்பளம்) ‘வொர்க் ஃபிரம் ஹோம்’ முறையில் பணியில் சேர்ந்தார். ஆரம்பத்தில் சம்பளம் குறைந்தாலும், அங்கு அவருக்கு மன அமைதி கிடைத்தது. தற்போது தனது திறமையால் மீண்டும் ₹60,000 வரை சம்பளம் பெற்று வரும் அவர், ஹைதராபாத்தில் உள்ள தனது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி, கார்ப்பரேட் மற்றும் வங்கித் துறைகளில் உள்ள பணிச் சூழல் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
