“எனக்கு நீ வேண்டாம்…” வாட்ஸ்அப்பில் வந்த போட்டோவை பார்த்து பிரிந்த கணவர்… தூண்டில் போட்டு முன்னாள் காதலனை வெளுத்து வாங்கிய பெண் வீட்டார்..! சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்.!! – cinefeeds
Connect with us

CRIME

“எனக்கு நீ வேண்டாம்…” வாட்ஸ்அப்பில் வந்த போட்டோவை பார்த்து பிரிந்த கணவர்… தூண்டில் போட்டு முன்னாள் காதலனை வெளுத்து வாங்கிய பெண் வீட்டார்..! சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்.!!

Published

on

ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு வேறு நபருடன் திருமணம் நடந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் முன்னாள் காதலன், திருமணத்திற்குப் பிறகும் தன்னை வந்து சந்திக்குமாறு கடந்த ஒரு மாதமாக அப்பெண்ணை மிரட்டி வந்துள்ளார். ஆனால், அந்தப் பெண் அதற்குச் சம்மதிக்காமல் தொடர்ச்சியாக மறுத்து வந்துள்ளார்.

இதனால் மேலும் கோபமடைந்த அந்த நபர், அப்பெண்ணின் அந்தரங்கப் படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதோடு நிறுத்தாமல், அப்படங்களை பெண்ணின் கணவருக்கும் அனுப்பி குடும்பத்தைப் பிரித்துள்ளார். அந்த அந்தரங்கப் படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர், “எனக்கு நீ வேண்டாம்” எனக் கூறி மனைவியைப் பிரிந்து சென்றுள்ளார்.

Advertisement

இதனால் கடும் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், அந்த நபருக்குச் சாமர்த்தியமாகத் தூண்டில் போட்டனர். சந்திக்கலாம் எனக் கூறி அவரை வரவழைத்து, விஜயவாடாவில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு வந்த அந்த நபரைச் சூழ்ந்து வைத்து சரமாரியாகத் தாக்கி தர்மஅடி கொடுத்தனர். பின்னர், அவரைப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in