CRIME
“என் போனை ஏன் பிடுங்குறீங்க..?” லஞ்சத்தைக் தட்டிக்கேட்ட நபருக்கு மிரட்டல்… ரயில் நிலையத்தில் அரங்கேறிய அராஜகம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
கர்ப்பிணியாக இருக்கும் தனது மனைவியைச் சென்றடைவதற்காக இரண்டு நாட்களாக இரயில் நிலைய தட்கல் வரிசையில் முதல் ஆளாகக் காத்திருந்த நபர் ஒருவருக்கு, ஊழியரின் லஞ்சப் பேராசையால் பயணச்சீட்டு மறுக்கப்பட்ட அவலச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரிசையில் முதலாவதாக நின்ற அந்த நபரை அலட்சியம் செய்துவிட்டு, அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர் வேறொரு நபரிடம் ரூ.500 லஞ்சம் வாங்கிக்கொண்டு அவருக்கு முதலில் தட்கல் பயணச்சீட்டை வழங்கியதாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தன் மனைவியின் பிரசவ கால அவசரத்திற்காக ஊருக்குச் செல்ல முயன்ற ஒருவரின் நியாயமானத் தேவையை விட, லஞ்சப் பணத்திற்கே அங்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இதனை அந்த நபர் தட்டிக்கேட்டபோது, அவருக்கும் அந்தப் பெண் ஊழியருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த ஊழியர் பொதுமக்களிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டதோடு, லஞ்ச விவகாரத்தைப் படம் பிடித்த அவரது கைப்பேசியைப் பறிக்கவும் முயன்று மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், தட்கல் பயணச்சீட்டு வழங்கக் கோரியபோது, மொபைல் எண்ணிற்கு வந்த ஓடிபி தவறாக உள்ளது என்ற பொய்யானக் காரணத்தைக் கூறி ஊழியர்கள் மழுப்பியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி, தவறு செய்த இரயில்வே ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
